எல்லாமாகிய தேவன் - தூய்மைவாதிகளின் ஜெபம்
சித்தம் கொண்டு ஜெயங்கொள்ளுகிற தேவன்
தேவனே! உம்மை அனுபவிப்பதைக் காட்டிலும்,
உமது சேவையில் ஈடுபடுவதைக் காட்டிலும்
ஆறுதல் வேறொன்றிலும் இல்லை;
நீரே எல்லாரிலும் எல்லாமுமாயும் இருக்கிறீர்,
நான் அனுபவிக்கிற எல்லாவற்றையும் நீரே உருவாக்கி இருக்கிறீர், வேறொருவரும் இல்லை.
எல்லா வகையிலும், எதுவாக இருந்தாலும்
உமது சித்தத்தில் நான் மனமகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
எந்த விஷயத்திலும் எனக்கு நானே முடிவு செய்யும்படி நீர் எனக்குக் கட்டளையிட்டாலும்,
நானே முடிவெடுக்கும் ஆபத்து இல்லாதபடி நீரே எல்லாவற்றையும் செய்வதை நான் தேர்வு செய்கிறேன்.
ஏனென்றால், நீரே எல்லையற்ற ஞானம் நிறைந்தவர்,
உம்மால் தவறு இழைக்க முடியாது.
எல்லாம் உம்முடைய வசம் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்,
அவைகளை அங்கேயே விட்டுச்செல்வது எனக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது.
அப்படி செய்கிற பொழுது என்னுடைய முழு ஜெபமும் துதியாய் மாறுகிறது,
உம்மை வணங்கி உம்மை ஸ்தோத்தரிப்பதே எனக்கு பிரியமாய் இருக்கிறது.
உமது நன்மைக்கென்று முந்தி நான் உமக்கு எண்ணத்தை செலுத்த முடியும். நான் என்ன செய்வதென்று அறியாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நெருக்கடியில் இருக்கிறேன்.
நான் எதையாகிலும் திரும்பக் கொடுக்க வேண்டி ஏங்குகிறேன்,
ஆனால் உமக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று அறிந்து
நீரே எல்லாவற்றையும் செய்கிறவரென்று உணர்ந்து மகிழ்கிறேன்.
பரலோகத்திலும் பூலோகத்திலும் உமது மகிமையை பகிர்ந்து கொள்வதற்கு எவருமே இல்லை.
உமது பரிசுத்தமுள்ள நாமத்தை மகிமைப் படுத்துவதற்கு என்னால் எதுவுமே செய்ய இயலாது,
ஆனால் நான் உமது மிகுந்த கிருபையினால் ஆனந்தக் களிப்போடே எனது சரீரத்தையும் எனது ஆத்துமாவையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்க முடியும்.
நீரே என் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிறீர் என்றும்,
மீட்பின் முழு பணியும் உம்முடையது என்றும்,
என்னிடத்தில் காணப்படும் எந்தவொரு நற்கிரியையும் நல்லெண்ணமும் நீர் என்மீது காண்பித்த உம்முடைய வல்லமையினாலும் கிருபையினாலும் என்றும்,
உமது தயவுள்ள சித்தத்தின் படி விருப்பங்களையும் செய்கைகளையும் எண்ணில் உண்டாக்குகிறதே உமது முழு நோக்கமாய் இருக்கிறதென்றும் நான் அறிந்திருக்கிறேன்.
தேவனே! நீர் ஒவ்வொரு பொழுதும் எங்களை தடுத்து நிறுத்தாவிட்டால்
நாங்கள் பிசாசின் அவாதாரமாய் இருப்போம் என்பதை உணருகிற பொழுது, மனிதர்கள் மனிதர்களுடைய படைப்பின் வல்லமையையும் நன்மையையும் பற்றி பேசுவது எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது.
இது, நீர் கசப்பான அனுபவத்தால் என்னைப்பற்றி எனக்கு கற்றுக் கொடுத்த காரியம்.
(நீரே எல்லாவற்றிலும் எல்லமுமாயும் இருக்கிறீர், ஆமென் !)
───── ♰ ─────
கருத்துகள்
கருத்துரையிடுக